கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். செல்போன் பறிப்பு, தகராறு உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். CCTV காட்சிகள் மற்றும் கைரேகைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.


Coimbatore: கோவை பீளமேடு பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரமான சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (56). இவர் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி இந்திராணி (50) தண்ணீர் பந்தல் பஸ் நிறுத்தம் அருகே பூ வியாபாரம் செய்து வருகிறார். அவர்களுக்கு மணிகண்டன் (30) மற்றும் பரமேஸ்வரன் (27) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மணிகண்டன் டிரைவராக பணிபுரிந்து சுந்தராபுரத்தில் மனைவியுடன் வசித்து வருகிறார். பரமேஸ்வரன் தாயாருடன் இருந்து வருகிறார்.


ரங்கநாதனுக்கு மது பழக்கம் இருந்ததால் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக கடந்த 12 வருடங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினரை பிரிந்து சாலையோரமாக வசித்து வந்தார். தினமும் தண்ணீர் பந்தல் அடுத்த Telecom 3வது வீதி பகுதியில் படுத்து தூங்குவது இவரது வழக்கம். அதேபோல் மார்ச் 21 இரவு அந்த பகுதியில் படுத்து தூங்கினார்.


மார்ச் 22 காலை அந்த வழியாக சென்றவர்கள் ரங்கநாதன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தபோது, இறந்தவரின் அருகில் ரத்தக் கரையுடன் கல் கிடந்ததைக் கண்டனர். மர்ம நபர் ஒருவர் கல்லை ரங்கநாதன் தலையில் போட்டு கொலை செய்திருந்தது தெரியவந்தது.


இதையடுத்து போலீசார் ரங்கநாதன் உடலை மீட்டு ESI மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரங்கநாதனிடம் ஏற்கனவே மர்ம நபர் ஒருவர் இரண்டு முறை அவரது புதிய செல்போனை பறிக்க முயற்சி செய்திருந்தது தெரியவந்தது.


இதனால் மீண்டும் செல்போன் பறிப்பு முயற்சியில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது மது போதையில் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட யாராவது கல்லை போட்டு கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீசார் உடலின் அருகே இருந்த கல்லில் பதிவாகி இருந்த கைரேகைகளை கைப்பற்றியும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள CCTV கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் ரங்கநாதனை கொலை செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...