மேற்காசிய போர் நெருக்கடியை எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவுக்கு உண்டு - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மேற்காசிய போர் நெருக்கடியை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்கிறது என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதற்றத்தை ஏற்படுத்தும் அரசியல் மக்களிடம் எடுபடாது என்றும் தெரிவித்தார். எரிபொருள் விநியோகம் தடையின்றி நடைபெறுவதை வலியுறுத்தினார்.


Coimbatore: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், மேற்காசிய போர் நெருக்கடியை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டு வருவதாகவும், தேர்தல் காலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் மக்களிடம் எடுபடாது என்றும் தெரிவித்துள்ளார்.




25 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் மேற்காசிய போரால் உலகமே கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு கப்பல்கள் கொண்டு வரும் கடல் பாதைகள் மூடப்பட்டுள்ளதால் உலகெங்கும் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகள் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன.


இந்தியாவில் எரிபொருள் விலை நிலைமை


ஆனால், 140 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று உயர்ந்துள்ளது. ஈரான் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து உரையாடி வருகிறார். அவர் மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கைகளால் ஹார்மூஸ் நீரிணை வழியாக இந்தியா கச்சா எண்ணெய் கப்பல்கள் வந்து கொண்டிருக்கின்றன.


இந்தியாவில் சுமார் 30 கோடி குடும்பங்கள் சமையல் எரிவாயு இணைப்பை பெற்றுள்ளன. அதில் சுமார் 20 கோடி இணைப்புகள் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த 2014 முதல் வழங்கப்பட்டவை. வீடுகளுக்கு சமையல் எரிவாயு தட்டுப்பாடு வந்துவிடக்கூடாது, குறிப்பாக குடும்பத் தலைவிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


கொரோனா நெருக்கடி எதிர்கொண்ட அனுபவம்


பிரதமர் நரேந்திர மோடி நெருக்கடியை எதிர்கொள்வதில் வல்லவர் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா காலகட்டத்தில் பார்த்தார்கள். கொரோனா பொதுமுடக்கத்தால் 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா பேரழிவை சந்திக்கும் என உலகமே கணித்தது. ஆனால், அந்த பேரிடரை திறமையாக எதிர்கொண்ட பிரதமர் மோடி, 40க்கும் அதிகமான நாடுகளுக்கும் தடுப்பூசி உள்ளிட்ட உதவிகளை செய்தார்.


அதுபோலவே மேற்காசிய போர் நெருக்கடியையும் பிரதமர் மோடி எதிர்கொள்வார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். எனவே, இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவலைப்பட வேண்டும். வளைகுடா நாடுகளில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மோடி அரசு மீட்டுள்ளது.


வதந்திகள் தோல்வியடைந்தன


பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என வதந்தி பரப்பியவர்களின் முகத்திரை இரண்டு நாட்களில் கிழிந்ததை நாட்டு மக்கள் அறிவர். சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடின்றி கிடைத்து வருகிறது. பதுக்கலை தடுக்கவே கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.


கடந்த 12 ஆண்டுகால மோடி ஆட்சியில் மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது. அதனால், எந்த நெருக்கடியையும் இந்தியா சமாளிக்கும். எனவே, தேர்தல் நேரத்தில் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சூழ்ச்சி அரசியல் மக்களிடம் எடுபடாது என வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...