ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழகம் "Institutional Excellence" விருதை வழங்கி கௌரவித்தது. மாணவர்களின் புதுமைத்திறன் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை அங்கீகரித்து வழங்கப்பட்ட விருதை முனைவர் பி.எல்.சிவக்குமார் பெற்றுக்கொண்டார்.


Coimbatore: எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு குஜராத்தின் சூரத்திலுள்ள ஆரோ பல்கலைக்கழகம் "Institutional Excellence" விருதை வழங்கி கௌரவித்துள்ளது. மார்ச் 24 ஆம் தேதி நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது.




ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சர்வதேச மற்றும் தேசிய அளவில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் நடைபெறும் ஹேக்கத்தான் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று சாதனைகள் படைத்து வருகின்றனர். அண்மையில் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற Smart India Hackathon போட்டியில் பொறியியல் கல்லூரிகளுடன் போட்டியிட்டு முதல் பரிசை வென்று சாதனை படைத்துள்ளனர். இப்போட்டியில் பங்கேற்ற அணிகளுள் கலை அறிவியல் கல்லூரி அணி இது ஒன்று மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.




அதேபோன்று, சர்வதேச அளவில் இஸ்ரேல் Ariel பல்கலைக்கழகம் நடத்திய Israel Hackathon போட்டியில் இந்தியா சார்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி பங்கேற்று வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. பொறியியல் மாணவர்களுக்கு இணையாக தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கி வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்வியாளர்கள் மத்தியில் தனி கவனம் பெற்று வருகின்றனர்.




வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்திற்கேற்ப செயற்கை நுண் णறிவு, Machine Learning மற்றும் Cyber பாதுகாப்பு போன்ற துறைகளில் புதுமையான தீர்வுகளை மாணவர்கள் வழங்கி வருகின்றனர். புதுமைத்திறன், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் நடைமுறை சிக்கலைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.




IBM நிறுவன தொழில்நுட்ப நிபுணர் ஆய்வகம், நாட்டின் மேலாளர் Jagadisha Bhat அவர்கள் "Institutional Excellence" விருதினை வழங்க, கல்லூரியின் சார்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் Dr B.L. Sivakumar பெற்றுக்கொண்டார்.




"Institutional Excellence" விருதினைப் பெற்று தந்த கல்லூரியின் மாணவர்களுக்கும், உறுதுணையாக இருந்த கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கும் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் Dr Sundar Ramakrishnan பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...