கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையேயான ரயில் தடத்தில் மரங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக ஊட்டி-மேட்டுப்பாளையம் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாதை சீரமைக்கப்பட்ட பின்னர் ரயில் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் - ஊட்டி ரயில் பாதைகளில் மரங்களை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றது. நான்காவது நாளாக இப்பணிகள் நடைபெறுவதால், கோடை விடுமுறையில் மலை ரயிலில் பயணம் செய்ய முடியாமல் சுற்றுலாப் பயணிகள் இன்றும் ஏமாற்றத்துடன் திரும்பினர். பணிகள் முழுமையாக முடிவடையாததால், இன்றும் மலை ரயில்சேவை ரத்து செய்யப்படுகிறது. இத்தகவலை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.