பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொண்டாடப்பட்டது. சுற்றுப்புற சூழல் பொறியியல் துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழாவில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.


Coimbatore: கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28, 2026 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுற்றுப்புற சூழல் பொறியியல் துறை சார்பாக நடத்தப்பட்ட இந்த விழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பு மிக்கதாக அமைந்தது.




விழாவில் பார்க் கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அதிகாரி Dr. அனுஷா ரவி தலைமையேற்று உரையாற்றினார். பொறியியல் கல்வி பயிலும் அனைத்து துறை மாணவர்களும் தண்ணீரின் முக்கியத்துவம், அதை சேமிப்பது, பாதுகாப்பது குறித்தும், மரங்களை நட்டு புதிய வனங்களை உருவாக்குவது, இருக்கின்ற வளங்களை பாதுகாப்பது குறித்தும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.






விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கல்லூரியின் சுற்றுப்புற சூழல் பொறியியல் துறையின் முன்னாள் மாணவரும், TUV இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டாளருமான ரஞ்சித் குமார் சின்னசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதில் சுற்றுப்புற சூழல் பொறியியல் துறை மாணவர்களின் பங்களிப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.






விழாவில் உலக தண்ணீர் தினம் மற்றும் வனங்கள் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியருக்கு வினாடி வினா, பேச்சு போட்டி, ஓவிய போட்டி ஆகியவை நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவில் கல்லூரியின் முதல்வர் Dr. கே குமரேசன் வாழ்த்துரை வழங்கினார்.




விழாவை சுற்றுப்புற சூழல் பொறியியல் துறையின் தலைவர் Dr. சி அங்காளபரமேஸ்வரி, துணைத்தலைவர் Dr. ஆர் ஹரிஷ், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஏ ராஜா மற்றும் ஆசிரியர் பெருமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். விழாவின் போது விருந்தினர்கள் மற்றும் மாணவ மாணவிகள் 100 மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டு சிறப்பித்தனர்.


Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...