பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் பார்க் கல்வி குழுமங்களின் CEO Dr. அனுஷா ரவி தலைமையேற்றார். மாணவர்களுக்கு வினாடி வினா, பேச்சு, ஓவிய போட்டிகள் நடந்தன. 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.


Coimbatore: கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியின் சுற்றுப்புற சூழல் பொறியியல் துறை சார்பாக உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் பார்க் கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அதிகாரி Dr. அனுஷா ரவி தலைமையேற்று உரையாற்றினார்.

விழாவில் பொறியியல் கல்வி பயில்கின்ற அனைத்து துறை மாணவர்களும் கலந்து கொண்டனர். Dr. அனுஷா ரவி தனது உரையில், தண்ணீரின் முக்கியத்துவம், அதை சேமிப்பது, பாதுகாப்பது குறித்தும், மரங்களை நட்டு புதிய வனங்களை உருவாக்குவது, இருக்கின்ற வளங்களை பாதுகாப்பது குறித்தும் மாணவர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.



விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கல்லூரியின் சுற்றுப்புற சூழல் பொறியியல் துறையின் முன்னாள் மாணவர் மற்றும் TUV இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டாளர் ரஞ்சித் குமார் சின்னசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதில் சுற்றுப்புற சூழல் பொறியியல் துறை மாணவர்களின் பங்களிப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

உலக தண்ணீர் தினம் மற்றும் வனங்கள் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியருக்கு வினாடி வினா, பேச்சு போட்டி, ஓவிய போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் கல்லூரியின் முதல்வர் Dr. கே குமரேசன் வாழ்த்துரை வழங்கினார்.



விழாவை சுற்றுப்புற சூழல் பொறியியல் துறையின் தலைவர் Dr. சி அங்காளபரமேஸ்வரி, துணைத்தலைவர் Dr. ஆர் ஹரிஷ், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஏ ராஜா மற்றும் ஆசிரியர் பெருமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

விழாவின் போது விருந்தினர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கல்லூரி வளாகத்தில் 100 மரக்கன்றுகளை நட்டு விழாவை சிறப்பித்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இளைய தலைமுறையின் பங்களிப்பை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.

Newsletter

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...