கோவை மாதம்பட்டி அருகே உள்ள விவசாய தோட்டத்தில் இன்று மாலை இளம் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது, 35 வயது மதிக்கத்தக்க பெண் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
சடலமாக இருந்த பெண்ணின் கழுத்தில் காயங்கள் இருந்தது. மேலும், சடலத்தின் அருகே பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்ட தங்க நகைகள், கத்தி மற்றும் கையுறை ஆகியவற்றை போலீசார் கண்டெடுத்துள்ளனர்.
தற்போது,அப்பகுதியில், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.