மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகசுந்தரம் ராஜினாமா செய்துள்ளார்.

Coimbatore:
கோவை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் TR சண்முகசுந்தரம், தமது பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு பணிவான வணக்கம் தெரிவித்து, கோவை வடக்கு மாவட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Ycox7etVVUrTY8CyZJnArSfRgHuTT0xC0pgqLijd.jpg

தனது குடும்ப சூழ்நிலை மற்றும் பல்வேறு பணி சுமைகள் காரணமாக, தாம் வகித்து வந்த பதவியிலிருந்தும் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும் விலக முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
TR சண்முகசுந்தரம், கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த திமுக அரசியல்வாதியாக செயல்பட்டு வந்தவர். கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்து உள்ளூர் அரசியலில் தீவிரமாக செயல்பட்டார்.

TQ1e4gfuf7wKvjl7Yjthen5jfYkJjv3VfAV621MD.jpg
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டார்.
அண்மையில் 2026 தேர்தலை முன்னிட்டு, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்த சம்பவங்களும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டன.
இந்த நிலையில் அவர் ராஜினாமா செய்திருப்பது கோவை அரசியல் வட்டாரங்களில் கவனத்தை பெற்றுள்ளது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...