கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயணித்தனர். 48 டன் சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றத்திலும் சேவைகள் தொடர்ந்தன என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Coimbatore: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் நிலவிய நிலையிலும், கோவை விமான நிலையத்திலிருந்து ஷார்ஜாவுக்கு மார்ச் மாதத்தில் வழங்கப்பட்ட விமான சேவைகளில் 4,880 பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும், 48 டன் எடை கொண்ட சரக்குகள் கையாளப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக கோவையில் இருந்து ஷார்ஜா மற்றும் சிங்கப்பூருக்கு வழங்கப்பட்டு வந்த விமான சேவைகள் மார்ச் 1-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டன. கோவையிலிருந்து அபுதாபிக்கு ரத்து செய்யப்பட்ட சேவைகள் தற்போது வரை மீண்டும் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், மார்ச் 9-ம் தேதி ஒரு நாள் கோவை-ஷார்ஜா இடையே ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் 12-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை வாரந்தோறும் வியாழக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை தொடர்ந்து விமான சேவைகள் வழங்கப்பட்டன.
போர் பதற்றம் நிலவி வரும் சூழலிலும் மார்ச் மாதத்தில் 16 நாட்கள் இயக்கப்பட்ட விமானங்களில் மொத்தம் 4,880 பேர் பயணித்துள்ளனர். 48 டன் எடை கொண்ட சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
ஒவ்வொரு முறை விமானம் இயக்கப்படும்போதும் 160 பயணிகள் கோவை வந்து சேர்ந்தனர். அதேபோல் 140 பயணிகள் கோவையிலிருந்து ஷார்ஜா புறப்பட்டுச் சென்றனர். மேலும், ஒவ்வொரு முறை விமானம் இயக்கப்பட்டபோதும் 3 டன் எடை கொண்ட சரக்குகள் விமானங்களில் கொண்டு செல்லப்பட்டன.
ஏப்ரல் மாதத்திலும் கோவை-ஷார்ஜா இடையே விமான சேவைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும், ஈரான்-இஸ்ரேல் போர் சூழல் மோசமடைந்தால் திடீரென சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
கோவை சர்வதேச விமான நிலையம் மேற்கு தமிழகம் மற்றும் கேரளாவின் சில பகுதிகளுக்கு முக்கிய வான் போக்குவரத்து மையமாக செயல்பட்டு வருகிறது. வளைகுடா நாடுகளுக்கான விமான இணைப்புகள் இப்பகுதியில் வசிக்கும் வெளிநாடு வேலைக்கு செல்பவர்களுக்கு மிக முக்கியமானதாக உள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...