இளநீர் கடையில் செந்தமிழ் செல்வனின் வித்தியாசமான வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு தொகுதி DMK வேட்பாளர் துரை செந்தமிழ் செல்வன் சாயிபாபா காலனி பகுதியில் இளநீர் கடையில் இளநீர் வெட்டிக் கொடுத்து வாக்காளர்களை சந்தித்தார். DMK அரசின் சாதனைகளை விளக்கி, அடிப்படை வசதிகள் வழங்குவதாக உறுதியளித்தார்.


Coimbatore: கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் துரை செந்தமிழ் செல்வன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இன்று சாயிபாபா காலனி பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் வாக்காளர்களை சந்தித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.




இன்று சாயிபாபா காலனி பகுதி கழகத்திற்கு உட்பட்ட கருப்பராயன் கோவில், சங்கனூர், தண்டல் ராமன் வீதி, கண்ணப்ப நகர், காமாட்சி வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்தார். இப்பகுதியில் உள்ள வாக்காளர்களுடன் நேரடியாக உரையாடி அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார்.




அப்போது அப்பகுதியில் உள்ள இளநீர் கடைக்கு சென்ற வேட்பாளர் துரை செந்தமிழ் செல்வன், வாக்காளர்களுக்கு இளநீர் வெட்டிக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இளநீர் கடையில் கூடியிருந்த மக்களுடன் நெருக்கமாக பழகி அவர்களுடன் இணைந்து கொண்டார்.




தொடர்ந்து பேசிய வேட்பாளர் துரை செந்தமிழ் செல்வன், DMK அரசு கடந்த 5 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு செய்த சாதனைகளை விளக்கி கூறினார். கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் DMK அரசு செயல்படுத்திய திட்டங்களை எடுத்துரைத்தார்.




மேலும் பேசிய அவர், இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் வழங்கி உறுதி செய்யப்படும் என கூறினார். குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். தேர்தலில் வெற்றி பெற்றால் இப்பகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.

Newsletter

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....