சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜய் குறித்து பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது வைரலாக வருகிறது.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில் தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். வாரச்சந்தை காரணமாக மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், காய்கறி வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி ஆதரவு திரட்டினார்.



அப்போது அங்கிருந்த ஒரு காய்கறி கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பெண்மணி மற்றும் இரண்டு இளம்பெண்களிடம் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், தங்களது தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் பெண்களும் பொதுமக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள் என தெரிவித்தார்.



இதனைத் தொடர்ந்து, அந்த பெண்கள் வேட்பாளரிடம் பல கேள்விகளை எழுப்பினர். “உங்கள் தலைவர் விஜய் தனது சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை எனச் செய்திகள் வெளியாகின்றன. அப்படியானவர் பொதுமக்களை எப்படி கவனிப்பார்?” என்றும், “உங்கள் கட்சியில் இளம் நிர்வாகிகள் மூத்தவர்களை மரியாதையற்ற முறையில் பேசுவது ஏன்? இதை உங்கள் தலைவர் ஏன் கண்டிக்கவில்லை?” என்றும் கேள்வி எழுப்பினர்.



இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் வேட்பாளர் தயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. உடன் இருந்த கட்சி நிர்வாகிகள் சமாதானப்படுத்த முயன்றபோதும், “ஆதாரத்துடன் பதில் சொல்ல வேண்டும்” என பெண்கள் வலியுறுத்தினர்.

இதனால் அங்கு சிறிய பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களும் கூடத் தொடங்கிய நிலையில், வேட்பாளர், தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து வெளியேறினார்.

இந்த சம்பவம் அங்கு இருந்த சிலரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...