“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன், பிரதமரின் வார்த்தைகள் தனது லட்சிய உறுதியை மேலும் பலப்படுத்தியுள்ளதாக வீடியோ பதிவு மூலம் குறிப்பிட்டுள்ளார்.


Coimbatore: தமிழக பா.ஜ.க. தொண்டர்களுடன் பிரதமர் மோடி நிகழ்த்திய ‘எனது பூத், வலிமையான பூத்’ (Mera Booth, Sabse Mazboot Samvaad) கலந்துரையாடல் நிகழ்வு, தனக்குப் புதிய உத்வேகத்தையும் மனவலிமையையும் கொடுத்துள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமரின் வார்த்தைகள் தனது லட்சிய உறுதியை மேலும் பலப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

“மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தச் சூழலிலும், பிரதமரின் ஊக்கமளிக்கும் பேச்சு தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் ஆழமாக விதைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும், தனது உடல்நலம் குறித்து தொடர்ந்து விசாரித்து வரும் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், “உங்களின் பிரார்த்தனைகளுக்கும் ஆசிகளுக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Newsletter

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....