குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்கு சேகரிப்பின்போது குழந்தைகளுடன் இணைந்து சிலம்பம் சுழற்றி வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார். அவருக்கு AIADMK சார்பில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.


Coimbatore: கோவை குனியமுத்தூர் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளரும் முன்னாள் அமைச்சர்ருமான எஸ்.பி.வேலுமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அவரது தேர்தல் பிரசார பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.





அதன் தொடர்ச்சியாக இன்று குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற அவர், அந்த பகுதி மக்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்டு பிரசாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவருக்கு சிலம்பம் சுழற்றி AIADMK சார்பில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.





வரவேற்பின்போது குழந்தைகளுடன் இணைந்து அவரும் சிலம்பம் சுழற்றி வாக்காளர்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். தமிழ் பாரம்பரிய கலையான சிலம்பாட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் நடந்த இந்த நிகழ்வு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொண்டாமுத்தூர் தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் எஸ்.பி.வேலுமணி, வாக்காளர்களின் ஆதரவை திரட்டுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

Newsletter

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...