தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் வேளாண்மை அறிவியல் நிலையமானது வேலூர் மாவட்டத்தில் உள்ள விரிஞ்சிபுரம் வருவாய் கிராமத்தில் இயங்கிவருகிறது. இத்தகைய வேளாண்மை அறிவியல் நிலையங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் நூறு சதவிகித நிதி பெற்று செயல்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பிரச்சனைகளைக் கண்டறிந்து அதற்கான தகுந்த ஆலோசனைகள், பயிற்சிகள், செயல்முறை விளக்கங்கள், மாதிரி திடல்கள், முதனிலை செயல் விளக்க திடல்கள், வயல்வெளி ஆய்வுகள் மற்றும் இதர விரிவாக்கப் பணிகளை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையங்கள் இந்தியாவில் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலும் உள்ளன. இந்தியாவில் தற்போது 645 வேளாண் அறிவியல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கட்டமைப்பு மற்றும் நிர்வாக மேலாண்மை காரணங்களுக்காக இரண்டு அல்லது மூன்று மாநிலங்களில் உள்ள வேளாண் அறிவியல் நிலையங்களை ஒன்றிணைத்து ஒரு மண்டலமாக இயங்கிவருகிறது.
ஆண்டுதோறும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் தொடங்கிய தினமான ஜூலை 16 அன்று அந்தந்த மண்டலத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மண்டலத்தில் உள்ள சிறந்து விளங்கும் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் விரிஞ்சிபுரம் வேளாண் அறிவியல் நிலையம் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் பந்தாவது மண்டலத்திற்கான சிறந்த வேளாண் அறிவியல் நிலையம் 2016 என்ற விருதை தனது சிறந்த பணிகளால் பெற்றுள்ளது. விரிஞ்சிபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோஷ்வா டேவிட்சன் விருதுக்கான சான்றிதழ் மற்றும் ரூ.2,25,000 காசோலையை புதுதில்லியில் 2017-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி அன்று நடந்த விவசாயப் பெருவிழாவில் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் ஸ்ரீ ராதா மோகன் சிங்க்-யிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
இந்த விருதினைப் பெற்றதற்கு உறுதுணையாக இருந்த வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் விரிஞ்சிபுரத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் மு.பாண்டியன் அவர்களுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு என வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் கூறினார்.
மேலும், இத்தகைய தேசிய விருது பெற வழிகாட்டியாக இருந்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்குநர் ஹெச்.பிலிப் நன்றி கூறினார்.
மேலும், இந்த விருது சக விஞ்ஞானிகளின் ஒரு கூட்டு முயற்சி மற்றும் கடின உழைப்பிற்கான வெகுமதி என்றும் கூறினார். அனைத்திற்கும் மேலாக இந்த விருது வாங்கியதற்கான உத்வேகம் மற்றும் முக்கியமான ஆலோசனைகள் அனைத்தும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணை வேந்தரையே சாரும் என்றும் ஒருங்கிணைப்பாளர் ஜோய்வா டேவிட்சன் கூறினார்.