ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையும், தனியார் தன்னாட்சி கல்லூரிகளில் 10வது இடத்தையும் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் 2வது இடமும், Coimbatore-யில் சிறந்த இடமும் பெற்றுள்ளது. புது Delhi-யில் நடந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.


Coimbatore: கோவையில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld வெளியிட்ட கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது. இந்திய அளவில் 7வது இடத்தையும், தமிழ்நாட்டில் 2வது இடத்தையும், Coimbatore-யில் கல்விச் சாதனைக்கான சிறந்த இடத்தையும் பெற்றுள்ளது. மேலும், தனியார் தன்னாட்சி கலை அறிவியல் கல்லூரிகளில் இந்திய அளவில் 10வது இடத்தையும் பிடித்துச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.



சிறந்த கல்வி மற்றும் கல்லூரியின் பன்முகச் சாதனைகளைப் பாராட்டி புது Delhi-யில் நடத்தப்பட்ட விழாவில், கல்லூரியின் தொடர் சாதனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அமெரிக்காவின் Dallas கல்லூரியின் முன்னாள் துணைவேந்தர் Dr. Joe D. May மற்றும் மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தின் இந்தியச் செயல்பாடுகளுக்கான தலைமை செயல் அதிகாரி David Das ஆகியோர் இந்த விருதுகளை வழங்கினர்.

S.N.R. Sons அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் Dr. Sundar Ramakrishnan இதுபற்றிக் கூறும்போது, "இந்த விருதுகளை, உயர்கல்வியில் சிறந்து விளங்குவதற்கான எங்களது கல்வி நிறுவனத்தின் முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய தொடர் முயற்சிகளுக்கான அங்கீகாரமாகக் கருதுகிறோம்" என்றார்.

கல்லூரியின் சார்பில் விருதுகளைப் பெற்றுக்கொண்ட கல்லூரி முதல்வர் Dr. K. Chitra, "இளம் தலைமுறையின் அறிவுசார் திறன்களை வளர்ப்பதிலும், ஆராய்ச்சி மனப்பான்மையோடு கூடிய கற்றலை ஊக்குவிப்பதிலும், கல்வித்துறையில் உலகளாவிய தர அளவுகோல்களுக்கு நிகராகப் பயன் தரும் கல்வியை வழங்குவதிலும் எங்கள் கல்லூரி தொடர்ந்து முயற்சி செய்ய ஊக்கமளிப்பதாக இந்த விருதுகள் அமைகின்றன" என்று குறிப்பிட்டார்.

தேசத்தைக் கட்டமைக்கும் எதிர்காலச் சந்ததிகளான மாணவிகள் அறிவுநலம், உடல்நலம், மனநலம் என முழுமையான வளர்ச்சி பெற வேண்டும் என்ற பொறுப்புணர்வோடும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்து செயல்பட்டு வரும் Sri Ramakrishna மகளிர் கலை அறிவியல் கல்லூரியானது, இந்திய அளவில் உயர்கல்விக்கான ஒரு முதன்மைக் கல்வி நிறுவனமாகச் சிறந்து விளங்குவதை அனைவரும் வெகுவாகப் பாராட்டினர். இந்தச் சாதனை, கல்வித் துறையில் தரமான கல்வி வழங்குவதில் கல்லூரியின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...