கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் சிறப்பு பிரிவு துவங்கப்பட்டுள்ளது. டீன் கீதாஞ்சலி இது குறித்து விளக்கினார்.


Coimbatore: கோவையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப அழற்சி பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கோவை அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு பிரிவு துவங்கப்பட்டுள்ளது.




கோவையில் ஏப்ரல் 27 நிலவரப்படி அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இம்மாத துவக்கத்தில் இருந்தே வெப்பத்தின் தீவிரம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் வெளியில் அதிக நேரம் செலவிடுவோர் ஹீட் ஸ்ட்ரோக் எனும் வெப்ப அழற்சி பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.




திடீரென உடல் வெப்பநிலை அதிகரித்தல், அதீத தாகம், தலைவலி, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகளுடன் சிகிச்சை பெற வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக காய்ச்சல், தலைவலிக்காக அரசு மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.




இந்நிலையில், Heat Stroke பாதிப்புக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் வகையில் 10 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு பிரிவு துவங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் கீதாஞ்சலி தெரிவித்தார். அவர் மேலும் விளக்குகையில், "அவசர சிகிச்சை பிரிவு மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் ORS தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. புதிதாக துவங்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவிலும் 10 லிட்டர் ORS தண்ணீர் வைக்கப்படும்" என்றார்.




"காய்ச்சல் இருந்தால் மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் உரிய சிகிச்சை பெறுவது அவசியம். குறிப்பாக குழந்தைகளுக்கு பழைய மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. ஆறு மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளுக்கு drops மட்டுமே கொடுக்க வேண்டும். இது அடர்த்தி அதிகமாக இருக்கும் என்பதால் பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே கொடுக்க வேண்டும்" என்று டீன் கீதாஞ்சலி வலியுறுத்தினார்.




"சிலர் அடர்த்தி குறைவாக இருக்கும் syrup அளவை மாற்றி drops ஆக கொடுக்கின்றனர். அளவுக்கதிகமான மருந்து கொடுப்பது ஆபத்தில் முடியலாம். இதனால் மருந்து கொடுக்கும் போது அளவீட்டை சரிபார்ப்பது மிக அவசியம்" என்று டீன் கீதாஞ்சலி எச்சரித்தார்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...