எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவராக கே.என்.நேரு, கொறடாவாக எ.வ.வேலு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


சென்னை: தமிழக சட்டப்பேரவையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழக முதல்வராக சி.ஜோசப் விஜய் இன்று (மே 10) பதவியேற்றுள்ள நிலையில், நாளை மே 11ஆம் தேதி நடைபெறவுள்ள 17வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக தனது பணியைத் தொடங்கவுள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. மேலும், திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வரான மு.க.ஸ்டாலின், அவர் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியடைந்தது அரசியல் வட்டாரங்களிலும் திமுக நிர்வாகிகளிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால், திமுக சட்டமன்றக் குழுத் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் யார் பெயர் முன்மொழியப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்தச் சூழலில், தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் கடந்த மே 7ஆம் தேதி மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், அவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட உள்ளார்.

மேலும், சட்டமன்றக் குழு துணைத் தலைவராக கே.என்.நேரு மற்றும் கொறடாவாக எ.வ.வேலு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...