பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்ளி கொலை செய்த சம்பவம் நடந்தது. கோட்டூர் போலீசார் குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.


Coimbatore: பொள்ளாச்சி அருகே குடும்ப பூசல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு இளைஞரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியை கோட்டூர் போலீசார் கைது செய்துள்ளனர்.




கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (56). இவருடைய மகன் தமிழ்ச்செல்வன். அதே பகுதியில் அருகில் ஆனந்த் (29) என்பவர் தனது மனைவி பிரியாவுடன் வசித்து வந்தார்.




தமிழ்ச்செல்வனுக்கும் ஆனந்தின் மனைவி பிரியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது தொடர்பாக இரு குடும்பங்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.




இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆனந்த் மது போதையில் பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டார். தகராறின் போது ஆனந்த் பாலகிருஷ்ணனை தள்ளியதில் அவர் கீழே விழுந்து தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது.




சம்பவத்திற்குப் பிறகு பாலகிருஷ்ணன் தனது மூத்த மகள் தமிழ்ச்செல்வி வீட்டிற்கு சென்று ஆனந்த் தன்னை அடித்துவிட்டதாகவும், உடல் சோர்வாக இருப்பதாகவும் கூறினார். உடனடியாக தமிழ்ச்செல்வி தனது தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.




ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாலகிருஷ்ணன் உயிரிழந்துவிட்டார். உடனடியாக தகவலறிந்த கோட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.




இது தொடர்பாக கோட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றவாளி ஆனந்த் கைது செய்யப்பட்டு மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...