கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக விமானங்கள் தற்காலிகமாக கொச்சிக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: இன்று மாலை கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் கிளைகள் சாய்ந்து விழுந்தன. இதன் தொடர்ச்சியாக, கோவை சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த பகுதியில் பாதுகாப்பு சிக்கல் ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை நோக்கி வந்த சில விமானங்கள் தற்காலிகமாக கொச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தையடுத்து, பாதுகாப்பு பணிக்காக சிஐஎஸ்எஃப் வீரர்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். சேதமடைந்த பகுதியை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இரவு 9.30 மணிக்குப் பிறகு நிலைமை சீரடையும் என்றும், அதன் பின்னர் கோவை விமான நிலையத்தில் விமான சேவைகள் மீண்டும் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...