கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன. எம்.பி.ஏ கட்டிடத்தின் மீது மரம் விழுந்து சேதம் ஏற்பட்டதுடன், தேர்வுத் துறை விடைத்தாள் அறையிலும் நீர் கசிவு ஏற்பட்டதால் மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.




கோவை:

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.



குறிப்பாக, பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில், சுற்றுச்சூழல் அறிவியல் துறை கட்டிடம் மற்றும் எம்.பி.ஏ (MBA) துறை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் பெரிய மரங்கள் வேரோடு சரிந்தன.



இதில், எம்.பி.ஏ துறை கட்டிடத்தின் முதல் தளத்தின் மீது ராட்சத மரம் ஒன்று முற்றிலும் சாய்ந்து விழுந்ததில், கட்டிடத்தின் கூரைத் தகடுகள் சுக்குநூறாக உடைந்தன. மேலும், மரத்தின் கிளைகள் துறை மண்டபத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தின.



இந்த சம்பவம் நேற்று மாலை 5 மணிக்குப் பிறகு நிகழ்ந்ததால், அச்சமயம் கட்டிடத்திற்குள் மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

இருப்பினும், கட்டிடத்திற்குள் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், அங்கு இருந்த நாற்காலிகள், மின் விசிறிகள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தேர்வுத் துறை அறைக்குள்ளும் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் விடைத்தாள்கள் சேதமடைந்திருக்குமோ என்ற அச்சம் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமை குறித்து பல்கலைக்கழக பதிவாளர் ஆர். ராஜவேலிடம் கேட்டபோது, “சனிக்கிழமை காலை முதலே பல்கலைக்கழக வளாகத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மரங்கள் விழுந்ததால் ஏற்பட்ட கட்டமைப்பு சேதங்கள் மற்றும் தேர்வுத் துறையில் ஏற்பட்ட நீர் கசிவு குறித்து ஆய்வு செய்து, தேவையான பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்று தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...