மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.




கோவை: கோவை தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள மாதம்பட்டி அருகே நேற்று இரவு வாலிபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிர்பாராத விதமாக அவரது பைக்கின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் வாலிபர் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு, நடுரோட்டில் பல அடி தூரம் உருண்டு விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில், விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சம்பவ இடத்திலிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது.

சம்பவத்தை பார்த்த அருகிலிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக ஓடி வந்து, படுகாயமடைந்த வாலிபரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காட்சி அப்பகுதியில் உள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பார்ப்போரின் நெஞ்சை பதற வைத்து வருகிறது.

தகவல் அறிந்த பேரூர் காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற காரின் பதிவு எண்ணை வைத்து, அதனை ஓட்டி வந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...