பொள்ளாச்சி அருகே சட்டபேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சொந்த ஊரான திப்பம்பட்டி பூங்கா நகரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து, மது பாட்டில்களை வீசி உடைத்து போராட்டம்.
பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி பூங்கா நகரில் உள்ள விவசாயத்தோட்டத்தில் நெடுஞ்சாலையிலிருந்து அகற்றப்பட்ட மதுபான கடை புதிதாக திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தகவலறிந்த கிராம மக்கள் அந்த பகுதியில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி நேற்று அதே இடத்தில் மதுபான கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த கிராமமக்கள் நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் இன்று கடையை முற்றுகையிட்டனர். அப்போது திடீரென ஆவேசமாக பூட்டைஉடைத்து கடையில் இருந்த மதுபாட்டில்களை கடைமுன்பு உடைத்து நொருக்கியதால் பெரும்பரபரப்பு ஏற்ப்பட்டது.
பின்னர் அங்கு வந்த காவல்துறை மற்றும் ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கடையை அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மதுபானக்கடைக்கு எதிராக துணை சபாநாயகர் ஊரிலேயே பொதுமக்கள் கடையை உடைத்திருப்பது ஆளும் கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.