தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையராக ஏ.கே.விசுவநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது ஆணையராக உள்ள கரண் சின்ஹா காவல்துறை தேர்வு வாரிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரிகள் ரவி, கரண் சின்ஹா, சுனில்குமார் சிங் உள்ளிட்டோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
டாக்டர் எம்.ரவி. காவல்துறை தலைமையக கூடுதல் டி.ஜி.பி.யாகவும், சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி. ஜெ.கவுரி மெட்ரோ ரயில் பாதுகாப்பு அதிகாரியாகவும், கோவை போக்குவரத்து துணை ஆணையர் சரவணன் சென்னை தலைமையகத்துக்கும், காவல்துறை தேர்வு வாரிய தலைவராக இருந்த சுனில்குமார் சிங் ஊர்காவல்படைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது, கோவைக்கு புதிய போக்குவரத்து துணை ஆணையராக M.துரை,IPS நியமிக்கப்பட்டுள்ளார்.