குடிநீர் பிரச்சனைகாக பொதுமக்கள் மறியல் உள்ளிட்ட தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி பகுதிக்கு குடிநீர் விநியோகத் தட்டுப்பாடு நிவர்த்தி செய்து சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன்  இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாவட்டத்தில் பருவமழை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக 140 வருடங்களுக்கு முன்னர் பருவமழை இல்லாத காரணத்தினால் கோவை மாவட்டத்தில் இது போன்ற வறட்சி காணப்பட்டது. இருந்தாலும் கோவை மாநகராட்சி போர்கால அடிப்படையில் தேவையான குடிநீரை அனைத்து வார்டு பகுதிகளுக்கும் விநியோகித்து வருகிறது. குறிச்சிப் பகுதியான ஆழியார் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 35 லட்சம் லிட்டருக்கும், பில்லூர் குடிநீர் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 40 இலட்சம் லிட்டர் குடிநீரும் பெறப்பட்டு வருகிறது.

தற்பொழுது, பொள்ளாச்சி பிரதான சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மூலம் சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருவதால் ஆழியாறு திட்டத்தின் பிரதான குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. மேலும், தலைமை நீரேற்று நிலையம் மற்றும் நீர்உந்து நிலையங்களில் மின்தடை ஏற்படுவதாலும், குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளுக்கு குறைவான அளவே குடிநீர் பெறப்படுகிறது.

மேலும், பில்லூர் அணைப்பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மரங்கள் சாய்ந்து சில நேரங்களில் மின்தடை ஏற்படுவதால், குறிச்சி பகுதிக்கு குறைவான அளவே குடிநீர் பெறப்பட்டு வருகிறது. மேற்கண்ட காரணங்களால் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்தில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

மேலும், பருவமழை பொய்த்து நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் மேற்கண்ட பகுதிகளில் கிணற்று நீர் விநியோகம் செய்வதிலும் சற்று காலதாமதம் ஏற்படுகிறது, அவ்வப்போது பெறப்படும் புகார்களை சரிசெய்ய உடனடியாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கூடுதலாக ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் விநியோகக் குழாய்கள் அமைத்து கிணற்று நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இயற்கையினால் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொள்ளாமல் சிலர் சாலை மறியல், பேருந்து மறியல் போன்ற தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த தவறான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். இவ்வளவு கடுமையான வறட்சி நிலையிலும் தமிழக அரசின் போர்கால நடவடிக்கைகளால் குனியமுத்தூர், குறிச்சி பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கடும் வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு அனைத்து பொதுமக்களும் குடிநீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...