கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் தாமரைச்செல்வி. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார்.
பொதுத்தேர்வில் ஆயிரத்து நூறு மதிப்பெண் கிடைக்கும் என்று தாமரைச்செல்வி எதிர்பார்த்திருந்தார்.
இந்நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. அதில் தாமரைச்செல்வி தான் எதிர்பார்த்ததை விட 12 மதிப்பெண்கள் குறைவாக எடுத்து ஆயிரத்து 88 மதிப்பெண் பெற்றுள்ளார்.
தேர்வில் தான் எதிர்பார்த்ததை விட குறைவான மதிப்பெண் பெற்றதால் தாமரைச்செல்வி மனம் உடைந்து காணப்பட்டார். இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த செட்டிபாளையம் போலீசார், சம்பவ இடதிற்கு சென்று தாமரைச்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்பார்த்ததை விட 12 மதிப்பெண்கள் குறைந்த நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.