மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். மாணவிகளுடன் கலந்துரையாடி உணவருந்திய அவர், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.


கோவை: கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் சமூகநீதி மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர், துறை அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.






பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவிகளிடம் இருந்து உணவின் தரம் குறித்தும், உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாகவும் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். மாணவிகளுடன் நேரடியாக கலந்துரையாடி, அவர்களுடன் இணைந்து உணவருந்தி உணவின் தரம் பரிசோதிக்கப்பட்டதாகவும் கூறினார்.




ஆய்வின்போது, விடுதியில் இருந்து கல்லூரிக்கு செல்ல தனி பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என மாணவிகள் கோரிக்கை வைத்ததாகவும், அவை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.






மாணவிகளின் நலனில் அரசு எப்போதும் அக்கறை கொண்டுள்ளதாகவும், அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார்.




தரமற்ற உணவு வழங்கியதாக நிரூபிக்கப்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மாவட்ட ஆட்சியரின் அறிக்கை மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.




மேலும், மாணவிகள் விடுதிகளில் மையப்படுத்தப்பட்ட சமையல் முறையால் உணவுத் தரம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ள நிலையில், அந்தந்த விடுதிகளிலேயே உணவு சமைத்து வழங்கும் நடைமுறையை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.




அமைச்சரின் வருகைக்காக மட்டுமே உணவின் தரம் மேம்படுத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து கேட்கப்பட்டபோது, மாணவிகளின் தொலைபேசி எண்கள் பெறப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். புகார்கள் தொடர்ந்தால் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.




பள்ளி, கல்லூரி, கோவில் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களின் அருகே உள்ள மதுபான கடைகள் குறித்து அரசின் கொள்கையின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான கோரிக்கைகள் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...