கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு பகுதிகளில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து புகையிலைப் பொருட்கள் மற்றும் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: கோவை: கோவை மாநகரப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனைகளில் வெவ்வேறு இடங்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உக்கடம் பகுதி என்.எச். சாலையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்ததாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நரேஷ்குமார் (50) மற்றும் ஹீராலால் (45) ஆகியோரை உக்கடம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கூல் லிப், ஹான்ஸ், மிராஜ், வி1 உள்ளிட்ட பல்வேறு வகையான புகையிலைப் பொருட்கள் மற்றும் ரூ.4,200 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், சாய்பாபா காலனி வெங்கடாபுரம் என்.எஸ்.ஆர். சாலையில் உள்ள ஒரு புத்தகக் கடையில் சோதனை நடத்திய போலீசார், தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் கணேஷ் குட்கா பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மகாலிங்கம் (25) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மேலும், சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இருகூர் சுங்கம் மைதானம் அருகே ஆவணி பேக்கரி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், 44 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக சுதாகரன் (25) என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோக வலையமைப்பு குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...