கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஹாங்காங் செல்லும் சில்க் ஏர்வேஸ் விமானத்தில் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில், விமான நிலைய அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது, டெல்லியை சேர்ந்த ராகுல் மாலிக் மற்றும் ராகேஷ் குமார் என்ற இருவரிடம் 1.35 லட்சம் அமெரிக்க டாலர்கள் மற்றும் 25 ஆயிரம் யூரோக்கள் இருப்பது தெரியவந்தது.
முறைகேடாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக கூறி அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை கடத்தி வந்த இருவரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளின் இந்திய மதிப்பு சுமார் 1.04 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.