கோடை விடுமுறை முடிவு: திருப்பூர் பள்ளிகள் திறப்பு - மாணவிகளுக்கு இனிப்பு, ரோஜா பூக்களுடன் வரவேற்பு

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறை முடிவில் மாணவிகளுக்கு போலீசார் மற்றும் ஆசிரியர்கள் இனிப்புகள், ரோஜா பூக்கள் வழங்கி பேண்டு வாத்தியத்துடன் சிறப்பு வரவேற்பு அளித்தனர். மாணவிகள் மொபைல் எடுத்து வராமல் பாதுகாப்புடன் பள்ளிக்கு வந்தனர்.


Tiruppur: தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடப்பட்ட கோடை விடுமுறை நிறைவடைந்து அனைத்து வகை பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கல்வியாண்டின் முதல் நாளில் மாணவிகளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.






பெற்றோருடன் பள்ளிக்கு வந்த மாணவிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் ஆசிரியர்கள் ஒழுங்குப்படுத்தி பள்ளிக்குள் அனுப்பி வைத்தனர். முதல் நாள் குழந்தைகளை பள்ளிக்கு விட வந்த பெற்றோர்கள் பள்ளியிலிருந்து வெளியே செல்ல மனமின்றி பள்ளி வளாகத்தின் கேட் அருகிலேயே நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.






பள்ளிக்கு வரும் மாணவிகள் மொபைல் போன்களை எடுத்து வரக்கூடாது என போலீசார் அறிவுரை செய்து பள்ளிக்குள் மாணவிகளை அனுப்பி வைத்தனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதால் எந்தவித பிரச்சனையும் இன்றி பள்ளி திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.




தொடர்ந்து பள்ளி வளாகத்திற்குள் வருகை தந்த 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ரோஜா பூக்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி சிறப்பு வரவேற்பு அளித்தனர். பேண்டு வாத்தியங்கள் முழங்க மாணவிகளை பள்ளிக்குள் ஊர்வலமாக அழைத்து சென்று அவரவர் வகுப்பறைகளில் அமர வைத்தனர்.




புதிய கல்வியாண்டை உற்சாகத்துடன் தொடங்கிய மாணவிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் வகுப்பறைகளுக்கு சென்றனர். ஆசிரியர்களும் மாணவிகளுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்து புதிய கல்வியாண்டை தொடங்கினர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...