பீளமேடு வார்டு 27-ல் சுகாதார மையம், பள்ளி, தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர் அம்பிகா தனபால்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆரம்ப சுகாதார மையம், பள்ளியில் புத்தக வழங்கல், சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு ஆகிய பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்தார். வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி உடன் இருந்தார்.


Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பல்வேறு மேம்பாட்டு மற்றும் நலத்திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் பாரதி காலனி ஆரம்ப சுகாதார மையம், துவக்கப்பள்ளி, சாக்கடை பராமரிப்பு, குப்பை சேகரிப்பு உள்ளிட்ட பணிகள் அடங்கும்.



பீளமேடு பாரதி காலனி பகுதியில் இயங்கி வரும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையத்தை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் பொதுமக்கள் வருகை பதிவேடு மற்றும் குழந்தைகள் தடுப்பூசி பதிவேட்டையும் சரிபார்த்தார். இந்த ஆய்வில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்.



பீளமேடு கோயமுத்தூர் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் மாணவ மாணவியருக்கு புதிய புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கவுன்சிலர் அம்பிகா தனபால் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை நேரடியாக வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இதில் உடன் இருந்தனர்.



கணக்குப்பிள்ளை வீதி பகுதியில் சாக்கடை அடைப்பு சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாக்கடை அடைப்பை முழுமையாக சரி செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் அறிவுறுத்தினார். வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி இதில் உடன் இருந்தார்.



பாரதி காலனி பகுதியில் தினசரி குப்பை சேகரிப்பு சரியாக நடைபெறுகிறதா என்பதை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். குப்பை வாங்கும் ஆட்டோ சரியாக வருகிறதா என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார். வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி இதில் உடன் இருந்தார்.



பெருமாள் கோயில் வீதி பகுதியில் பேட்டரி ஆட்டோ மூலம் குப்பை சேகரிப்பு பணியை கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு செய்தார். மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து தரும்படி பொதுமக்களிடம் வலியுறுத்தினார். வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி இதில் உடன் இருந்தார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...