மேட்டுப்பாளையம், சங்கர் நகரில் வசிக்கும் ரவி என்பவரது மகன் உதயா (20). இவரது மனைவி ஆனந்தி (18). இருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இதனிடையே, கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஆனந்தி வெள்ளிக்குப்பம் பாளையத்தில் உள்ள தனது தாயுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், இன்று ஆனந்தி தலைவலிக்கு சிகிச்சை பெற மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு 14 எண் கொண்ட பேருந்தில் மேட்டுப்பாளையம் வந்துகொண்டிருந்தார்.
அப்போது, தாலூகா அலுவலகம் அருகே பேருந்து வந்துகொண்டிருந்த போது உதயா தனது மனைவி ஆனந்தியை சமாதானம் செய்து சேர்ந்து வாழ அழைத்துள்ளார். இதற்கு ஆனந்தி மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த உதயா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தியின் மார்பில் குத்திவிட்டு உதயா தப்பி ஓடியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆனந்தியை மீட்ட அக்கம்பக்கத்தினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அனந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர் தப்பி ஓடிய உதயாவை தேடிவருகின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் ஓடும் பேருந்தில் மனைவியை கணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.