கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மத்திய அரசின் நீட் தேர்வு மற்றும் இந்தி திணிப்பு நடவடிக்கை ஆகியவற்றைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக மாநில மாணவர் அணி செயலாளர் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கை மற்றும் நீட் தேர்வு ஆகியவற்றிக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது.

பின்னர், பேட்டியளித்த மாணவர் அணி செயலாளார் புகழேந்தி கூறுகையில், நீட் தேர்வின் மூலம் வடமாநில மாணவர்களை மருத்துவ படிப்பில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வு போன்ற நடவடிக்கைகளால் இந்தியா உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த சர்வாதிகார போக்கு காரணமாக பாதிக்கப்படும் இளைஞர்கள், மாணவர்கள் ஒன்று திரண்டு கிளர்ச்சி செய்ய வாய்ப்பிருக்கின்றது" என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாணவரணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.