சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய்வு மேற்கொண்டார். ₹18 கோடி செலவில் பணிகள் நடைபெறும். கோடைக்காலத்தில் 60 MLD நீர் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமான சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் இன்று (04.07.2026) மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆலோசனை மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு குடிநீர் பயன்பாட்டிற்காக, சிறுவாணி அணையிலிருந்து 49.5 அடி வரை குடிநீர் எடுக்கப்படுகிறது. தற்போது நீர் இருப்பு சுமார் 13.45 அடியாக உள்ளது.

அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சுமார் 98 MLD வரை நீர் எடுக்கப்பட்டு, மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இன்றைய நிலவரப்படி 60 MLD நீர் எடுக்கப்பட்டு, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், சிறுவாணி அணைக்கான நீர் வரத்து குறித்து மாநகராட்சி ஆணையர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இந்த அணையில் ஏற்பட்டுள்ள கசிவின் காரணமாக கோடை காலங்களில் வழங்கப்பட்டுவரும் குடிநீரின் அளவு குறைய வாய்ப்பு உள்ளதாக அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. தற்போது மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோடைக் காலத்தில் 35 MLD நீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை கருத்தில் கொண்டும், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மாநகராட்சி ஆணையர், சிறுவாணி அணையினை நேரில் ஆய்வு செய்து, உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்து ஆலோசனைகளை மேற்கொண்டார்.

அப்போது, இந்த நீர் கசிவினை சரிசெய்திட சுமார் ₹18 கோடி செலவாகும் எனவும், இப்பணிகள் கேரளா மாநில நீர்வளத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது.

இப்பணிகள் நிறைவடையும் சமயத்தில் சிறுவாணி அணை பலப்படுத்தப்பட்டு, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோடைக் காலத்தில் சுமார் 60 MLD நீர் வரை கிடைக்கப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டறிந்த மாநகராட்சி ஆணையர், உடனடியாக இப்பணிகளை மேற்கொள்ள தேவையான மனித வளம் மற்றும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைத்திட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக, மாநகராட்சி ஆணையர், மத்திய மண்டலம், வார்டு எண்.49க்குட்பட்ட பாப்பநாயக்கன் பாளையம், பாரதியார் சாலை பகுதியில், தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சேகரிக்கும் பணிகளையும், தூய்மைப் பணியாளர்களின் வருகைப் பதிவேடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் செல்வக்குமார், நிர்வாக பொறியாளர் ராதா, உதவி நிர்வாக பொறியாளர் தீபாலட்சுமி, உதவி பொறியாளர் சரவணக்குமார், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் எழில், உதவி பொறியாளர் சக்திவேல், கேரளா மாநிலம் நீர் பாசனத்துறை உதவிப் பொறியாளர் விஷ்ணு, சுகாதார ஆய்வாளர் லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...