மதுபானக் கடை மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் ஆட்சியரிடம் மனு

மதுபானக் கடை மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து மனு அளிக்க வந்த அண்ணா தொழிற்சங்கம், எல்.பி.எப், பாட்டாளி தொழிற்சங்கம், சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கூறுகையில்,

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை அடுத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் செயல்பட்டு வந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து, மூடப்பட்ட இந்த டாஸ்மாக் கடைகளை குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் திறக்க மதுபானக் கடை நிர்வாகமும், அரசு நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆங்காங்கே பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கடையின் பூட்டை உடைத்தும், மது பாட்டில்களை உடைத்தும் போராட்டம் செய்து வருகின்றனர்.

கோவை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு குடியிருப்பு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடும் போது, அங்கு பணிபுரிவோர் மீதும் தாக்குதல்களை நடத்துகின்றனர். இதனால் பாதிப்படைந்த மதுபானக் கடை ஊழியர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் ஒதுக்கீடு செய்த இடத்திலேயே அரசு மதுபானக் கடைகள் இயங்கி வரும் நிலையில் மதுபானக் கடை மற்றும் ஊழியர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம், எல்.பி.எப், பாட்டாளி தொழிற்சங்கம், சிஐடியூ உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து டாஸ்மாக் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...