கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில் மொத்தம் ரூ.4 லட்சம் அபராதம் விதித்து கோவை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.
Coimbatore: கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக குப்பைக் குவியல்களை உருவாக்கிய நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம், ஒரே நாளில் மொத்தம் ரூ.4 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சியின் 100 வார்டுகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் 1,215 மெட்ரிக் டன் கழிவுகள் மக்கும் மற்றும் மக்காத கழிவுகளாக தரம் பிரிக்கப்பட்டு செயலாக்க மையங்களில் கையாளப்படுகின்றன. இதில் நாளொன்றுக்கு 835 மெட்ரிக் டன் ஈரக்கழிவுகளும், 380 மெட்ரிக் டன் உலர் கழிவுகளும் சேகரிக்கப்படுகின்றன.
திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016-ன் படி, மக்கும், மக்காத, சுகாதார மற்றும் சிறப்புக் கழிவுகளை தனித்தனியாகப் பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள், பேரணிகள், பதாகைகள், ஒலிப்பெருக்கி பிரச்சாரங்கள் மற்றும் சுவரோவியங்கள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஐந்து மண்டலங்களிலும் வாராந்திர ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு திடக்கழிவு மேலாண்மை பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜூலை 22 அதிகாலை சிங்காநல்லூர் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் ஆய்வில், சட்டவிரோதமாக குப்பைகள் குவிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின் பேரில், குப்பைகளை முறையாக அகற்றாமல் சட்டவிரோதமாக குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம், என மொத்தம் ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வீடு வீடாகச் சென்று கழிவுகளை சேகரிக்கும் பணியை 100 சதவீதம் உறுதி செய்யும் வகையில் மாநகராட்சி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக அனைத்து 100 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ள நிலையில்,
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இனி இதுபோன்ற சட்டவிரோத குப்பைக் கொட்டுதல் அல்லது குப்பைக் குவியல்களை உருவாக்குவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் அபராதத்துடன் சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.
குப்பை மேலாண்மையில் கடுமையான கண்காணிப்பு தொடர்வதால், பொதுமக்கள் மக்கும் மற்றும் மக்காத கழிவுகளை முறையாக தரம் பிரித்து மாநகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைத்து, நகரை தூய்மையாக பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.