தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் சார்பில் முழுநிலவு விழிப்புணர்வுக் கூட்டம் ஆனைமலை அருகே மஞ்சநாய்க்கனூர் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். சிறப்பு பயிற்சி மைய தன்னார்வலர் பயிற்றுனர் பத்மாவதி அனைவரையும் வரவேற்றார். கோடாங்கி பட்டி ஊராட்சி பொறியாளர் முத்துக்குமரன் வாழ்த்துரை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ஆழியார் துணை காவல் ஆய்வாளர்கள் டி.தென்னரசு, சின்னசாமி ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
பின், ஆழியார் துணை காவல் ஆய்வாளர் டி.தென்னரசு பேசும் போது, கிராமப்புறங்களில் குழந்தைகள் சரிவர படிக்கவில்லை என்றால் வீட்டு வேலைகளுக்கு, தோட்டம், பன்னையத்து வேலைகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். இதன் காரணமாக குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுகிறது.
கல்வி அறிவு பெறாத குழந்தைகள் பெற்றோர்கள் செய்யும் தொழிலையே செய்யக் கூடிய சூழல் உருவாகிறது. இதன் காரணமாக குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். பெற்றோர்கள் குடும்ப சூழலை தள்ளி வைத்து விட்டு குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதால் ஒரு தலை முறையை மாற்ற முடியும் என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட நிகழ்ச்சி மேலாளர் கே.நம்பிராஜன், களப் பணியாளர் சரோஜா உட்பட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக நிகழ்ச்சி மேலாளர் ஜே.இ.பீஜீ அலெக்ஸ் நன்றி கூறினார்.