இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கோவை: கோவை உக்கடம் பகுதியில், இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கின் நிதிப் பின்னணி தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் மத்திய அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள், இன்று காலை முதல் மேலும் ஐந்து பேரின் வீடுகளில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாத அமைப்புகளின் நிதிப் பரிவர்த்தனைகள், சர்வதேச பணப் பரிமாற்றங்கள் மற்றும் கார்ட்டெல் நிதி வலையமைப்புகள் தொடர்பான கோணங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் தொடர்ச்சியாக, உக்கடம் பகுதியில் வசித்து வரும் பெரோஸ், நவாஸ், புக்கு சதாம், அப்பாஸ் மற்றும் யூசுப் ஆகியோரின் வீடுகளில், மத்திய பாதுகாப்புப் படையினரின் ஆயுதப் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனையின்போது, வங்கி கணக்கு ஆவணங்கள், சொத்து தொடர்பான ஆவணங்கள், வெளிநாட்டு பணப் பரிமாற்றப் பதிவுகள், செல்போன்கள், மடிக்கணினிகள், மெமரி கார்டுகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் ஆய்வுக்காக கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, இதே வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, உக்கடம் அன்பு நகரைச் சேர்ந்த அசாருதீன் என்பவரின் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் ஐந்து பேரின் வீடுகளுக்கு சோதனை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதனுடன், கோட்டைமேட்டில் நடைபெற்ற கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கான நிதி எவ்வாறு திரட்டப்பட்டது, அதற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நிதி ஆதரவு இருந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் தொடர்பான முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பின்னரே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், உக்கடம் பகுதியில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் இடங்களில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த அதிரடி சோதனையால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.