கோவை மாநகர காவல்துறை (போக்குவரத்து) துணை ஆணையாராக துரை பதவியேற்பு


தமிழகம் முழுவதும் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை  இடமாற்றம் செய்து கடந்த 13-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, கோவை மாநகரில் துணை ஆணையராக (போக்குவரத்து) பணியாற்றி வந்த சரவணன் சென்னை பெருநகர தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 

கோவை மாநகரின் புதிய துணை ஆணையராக (போக்குவரத்து) துரை நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று காலை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த துரை-க்கு காவல்துறை அதிகாரிகள், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், கோப்புகளில் கையொப்பமிட்ட அவர், கோவை மாநகரின் போக்குவரத்து துணை ஆணையராக பதவியேற்றுக்கொண்டார். 



இதை தொடர்ந்து, அவர் சிம்ப்ளி-சிட்டி க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கோயம்புத்தூர் மாவட்டத்தை நன்கு அறிந்தவன் நான். எனது கல்லூரி படிப்பை இங்கு தான் முடித்தேன். போக்குவரத்து சம்பந்தமாக கோவை மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை உணரமுடிகிறது.  பொதுமக்களிடம் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வலியுறுத்துவது மட்டுமின்றி, கோவை மாநகரை போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்டமாக மாற்ற திட்டங்களை செயல்படுத்துவேன். திட்டங்கள் வருங்காலத்தை நோக்கி பயணிப்பதாக இருக்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...