ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு தேசிய தரநிர்ணயச் சான்றிதழ் (என்ஏபிஎச்)

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை, இந்திய தரக் கவுன்சில் வழங்கும் அங்கீகாரச் சான்றினை பெற்றுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சுகாதார கவனிப்பு தேசிய அங்கீகார வாரியம் (என்ஏபிஎச்எல்) இதை வழங்கியுள்ளது.

மருத்துவமனைக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் குறித்து, மருத்துவமனையை நிர்வாகித்து வரும் எஸ்என்ஆர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஆர்.விஜயக்குமார் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளாக படிப்படியான வளர்ச்சியை எட்டி வரும் இந்த மருத்துவமனைக்கு, நோயாளிகளின் கவனிப்புக்கு இந்த சான்றால் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நோயாளிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, திறன் போன்றவைகளில் என்ஏபிஎச் நிர்ணயித்த தரத்தில் எங்களது சேவைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்,” என்றார்.

என்ஏபிஎச், சான்றுக்கான தேவையான முறைகளில், மருத்துவமனையின் சீரிய நிர்வாகம், தீ விபத்திலிருந்து பாதுகாப்பு, பேரிடர் கையாளும் திறன், தொற்று நோய் தடுப்பு பயிற்சிகள், செவிலியர் அழைப்பு முறைகள், கருவிகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, நோயாளிகளின் கருத்துக்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான தரச்சோதனைகள், பணியாளர் திருப்திபோன்றவை மருத்துவமனையின் தரமான செயல்பாடுகளாக மட்டுமின்றி, நிலையானதாகவும் இருக்கும் என்ற உறுதியை அளித்துள்ளது.

நோயாளிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு நிர்ணயங்களை மிகவும் சரியாக அளிக்க இந்த என்ஏபிஎச் சான்று, தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. தரமான சிகிச்சை அளிப்பதால், வாழ்க்கையை வளமிக்க நலமானதாக மாற்றுவதோடு மட்டுமின்றி, பல்வேறு சமுதாய சேவைகளையும் மேற்கொண்டு பல சாதனைகளையும் படைத்துள்ளது. எட்டு மணி நேரத்தில் உடல் உறுப்பு தான உறுதி மொழியை அதிகம் பெற்று கின்னஸ் சாதனையிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...