சையானுக்கு தற்போது அறுவை சிகிச்சை தேவையில்லை- கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொ) ரங்கநாதன் பேட்டி


நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சையான் என்பவர் கடந்த இரு வாரத்திற்கும் மேலாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 



இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சயான் நேற்று இரவு 11.30 மணியளவில் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பொறுப்பு முதல்வர் ரங்கநாதன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

சயானுக்கு தேவையான மேல் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எலும்பு, குடல் மற்றும் உடல் நோய் தொடர்பான சிகிச்சைகள் சீராக மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயங்கள் சரியாகி வருகிறது. இங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சயானுக்கு தற்போது எந்த அறுவை சிகிச்சையும் தேவையில்லை. உரிய மருத்துவர்களிடம் ஆலோசித்த பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறுவார். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...