நீட் தேர்வை நோக்கி கல்விமுறையை மாற்றுவது என்பது தவறான விசயம் எனவும், சமச்சீர் கல்வியை மேம்படுத்த அதிமுக அரசு எதையும் செய்யவில்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியதாவது:-
நீட் மற்றும் இந்தி திணிப்புக்கு எதிராக கோவையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைமையின் உத்திரவுபடி வந்துள்ளேன். முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரின் வீடு, நிறுவனங்களில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனைகள் குறித்து தற்போது கருத்து சொல்ல விரும்பவில்லை.
தமிழகத்தில் நடைபெறும் அரசை தக்க வைத்துக் கொள்வதற்காக எதையும் செய்யக்கூடிய அரசாக தற்போதைய தமிழக அரசு இருக்கின்றது. தமிழகத்தில் அரசாங்கம் செயல்படவில்லை. மத்திய அரசிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ள தமிழகத்திற்கு விரோதமான, மக்கள் ஏற்றுக்கொள்ளாத விசயங்களை கூட மாநில அரசு ஏற்றுக்கொள்கின்றது.
தன்னை காப்பாற்றிக்கொள்ளும் ஆர்வம் மக்களை காப்பாற்றுவதில் மாநில அரசுக்கு இல்லை. தமிழக மருத்துவர்களை தரம்குறைந்த மருத்துவர்களாக யாரும் பார்ப்பதில்லை. நீட் தேர்வினால் மட்டுமே தரமான மருத்துவக் கல்வி கொடுக்கமுடியும் என்பது தவறான வாதம். நீட் தேர்வை எதிர் நோக்கி கல்விமுறையை மாற்றுவது என்பது தவறான விசயம்.
ஆண்டுதோறும் சமச்சீர்கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும், கல்வியின் தரம் பரீசிலிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு சமச்சீர் கல்வியின் தரத்தை உயர்த்த முயற்சிக்கவில்லை'' என அவர் பேசினார்.