சிறுமுகை வனச்சரகம், பெத்திகுட்டை அருகே உள்ள முதுபெத்திகுட்டை என்னும் பகுதியில் மாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான பட்டா நிலம் உள்ளது. வனவிலங்குகள் அடிக்கடி இந்த குடியிருப்புப்பகுதிகளில் நுழைந்து விவசாய நிலங்களை சேதம் செய்து வருவதால் அவற்றிடம் இருந்து விவசாய நிலங்களை பாதுகாக்கும் வகையில் மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை மாணிக்கத்திற்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி ஆண் காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பட இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.