பாரதீய ஜனதா கட்சியின் கொள்கையோடு ரஜினிகாந்த் கொள்கை ஒத்துப்போவதால் பாஜக-விற்கு அவர் வந்தால் வரவேற்போம், பலமே ரஜினிகாந்த்தான் என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என கோவையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.
தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோவை வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மத்திய பாஜக-வின் மூன்றாண்டு சாதனைகள் குறித்த பொதுக்கூட்டம் வருகின்ற மே 25 முதல் ஜூன் 15-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
மதுபானக்கடைகளுக்கு எதிராக போராடும் பெண்களை அடிக்கும் காவல்துறையைக் கண்டிக்கும் விதமாக சென்னையில் ஜூன் 16-ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்பட உள்ளது. தமிழக அரசு மணல் குவாரிகளை நடத்த தொடங்கிய பின்புதான் அதிக ஊழல் குவாரிகளில் நடைபெறுகிறது. மதுபானக் கடைகளில் கள்ளத்தனமாக குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே ரூபாய் 10 முதல் 30 வரை கூடுதல் விலை வைத்து சரக்கு விற்கப்படுகிறது. இந்த பணம் ஆளும் கட்சியினருக்கு செல்கிறது.
ரஜினிகாந்த் கடந்த இருபது வருடங்களாக அரசியல் குறித்து பேசி வருகிறார். எங்களைப்போல் அவருக்கும் ஆண்டவன் மீது நம்பிக்கை இருக்கிறது. பாஜக-வின் கருத்தோடு ஒத்துப்போகக் கூடியவர் என்பதால் அவர் பாஜக-விற்கு வந்தால் வரவேற்போம். ஆனால் ரஜினியால் தான் பாஜக-விற்கு பலம் என்று ஒத்துக்கொள்ள முடியாது.
கருப்பு பண பெருக்கத்திற்கு காரணமாக இருந்த சிதம்பரம் கருப்பு பண ஒழிப்பு குறித்து பேசுவது சரியானதல்ல. மத்திய அரசு கருப்பு பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. கார்த்திக் சிதம்பரத்தின் மீது பண பரிமாற்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போது லண்டன் பயணம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் விளக்கமளிக்க வேண்டும்" என்றார்.
இதைத்தொடர்ந்து, அதிமுக ஆட்சி நிலைக்குமா என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு, இது முதலமைச்சரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி என தமிழிசை பதிலலித்தார்.
மேலும், நீட் தேர்வு குறித்து தவறான தகவலை திமுக மாநிலங்களவை எம்.பி கணிமொழி பரப்பி வருகிறார். மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தால் தான் மருத்துவ உயர்கல்விக்கு 50 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகித இடங்கள் கிடைத்திருக்கிறது. நீட் தேர்விற்கு மாணவர்களை தயார் செய்வதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுக்குரியது" என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.