ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி சார்பில் ஷரீஅத் விழிப்புணர்வு நிகழ்ச்சி கரும்புக்கடையில் நடைபெற்றது. இஸ்லாமிய சட்டங்கள் மனிதனின் நடைமுறை வாழ்வுக்கு எந்த வகையிலும் முரணானது இல்லை என்பதை பறைசாற்றும் வகையில் பெண்களுக்காக நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சென்னையிலிருந்து முஸ்லிம் தனியார் சட்ட வாரிய உறுப்பினர் ஃபாத்திமா முசஃப்பர் கலந்துகொண்டு இஸ்லாம் கூறும் ஷரீஅத் சட்டங்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்.
இஸ்லாமிய சட்டங்கள் மனிதனின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டியாக உள்ளது. தலாக், சொத்துரிமை, திருமணம் போன்ற அனைத்து விஷயங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பாக அமைந்துள்ள மார்க்கம் என்பதைத் தெளிவு பட பேசினார்.

காங்கேயம் ஸ்னேஹா சொசைட்டி சர்வீஸ் அற்புத பவுல் ராணி, வழக்கறிஞர் மகேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தாய்மை, மேன்மை, பொறுமை, மென்மை என பல தன்மைகளைக் கொண்ட பெண்மையின் உரிமைகளையும் கடமைகளையும் ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் விரிவுரையாளர் ஜெசீமா சித்தீக்கியா விளக்கினார். இறைச் சட்டமே அனைத்திற்கும் தீர்வு என்ற தலைப்பில் இஸ்லாமியா பள்ளி ஆசிரியை அஸ்மாபீ தய்யிபா உரையாற்றினார். இஸ்லாமிய சட்டங்கள் மனிதனின் தேவை குறித்த நாடகம் அரங்கேற்றப்பட்டது.
முன்னதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி பொறுப்பாளர் ஃபர்சானா தலைமுறை ஆற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் இஸ்லாமிய சட்டங்களே அனைத்திற்கும் தீர்வு, அதனை பெண்களாகிய நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம் என அனைத்து பெண்களும் ஒரு சேர உறுதிமொழி மேற்கொண்டனர். சலீனா அனைவரையும் வரவேற்க நிகழ்ச்சி நெறியாளர் ஷக்கீலா நன்றி தெரிவித்தார்.