கோவை கணபதிபுதூர் அடுத்துள்ள சங்கனூர் சாலையில் மதுக்கடை செயல்பட்டு வந்தது. சத்தியமங்கலம் நெடுஞ்சாலையை ஒட்டி இந்த டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்ததையடத்து நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டது. ஆனாலும் கள்ளத்தனமாக மதுவை பதுக்கிவைத்து அங்கு 24 மணி நேரமும் மது விற்பனை நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இது தொடர்பாக சரவணம்பட்டி போலீஸாரிடம் அப்பகுதி மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஏற்கனவே பல முறை புகார்கள் அளித்திருந்தனர். ஆனாலும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், மேற்குறிப்பிட்ட டாஸ்மாக் கடையில் நேற்று (மே 20) கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வந்ததை அறிந்து அங்கு சென்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை சாலையில் வீசி எறிந்தனர். இதனிடையே, மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த நபர்கள் தப்பி ஓடியதை அடுத்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து மதுபாட்டில்களையும் வாலிபர் சங்கத்தினர் உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியதது.
இதேபோல், கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள ஆஞ்சநேயர் காலனி பகுதியில் அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், அப்பகுதி மக்களும் ஒன்றிணைந்து மதுக்கடையை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை மறித்த போலீஸார் 15 நாட்களுக்குள் மதுக்கடை அகற்றப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற மக்கள் கலைந்து சென்றனர்.