உதகை கேட்டியில் தெற்கு ரயில்வேயின் பொதுமக்கள் பாதுகாப்புப் படையின் 82வது பயிற்சி முகாம்

1962ம் ஆண்டு இந்தியாவின் மீதான சீன அத்துமீறலின் போது நிறுவப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்புப் படை அரசு ஊழியர்களுக்கு பொதுமக்கள் மற்றும் பொது சொத்துக்களை பாதுகாப்பதற்காக பயிற்சி அளித்து வருகிறது. அந்நிய தாக்குதல் மற்றும் இயற்கை சீற்றங்களின் போது உயிர்ச்சேதம் இல்லாமல் காப்பது, பொது சொத்துக்களுக்கு சேதம் இல்லாமல் காப்பது, மற்றும் தொழில் நிறுவனங்களின் உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்ள உதவுவது போன்ற சேவைகளில் இந்த அமைப்பின் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ரயில்வே ஒரு முக்கியமான பொது சேவையாக இருப்பதால், ரயில்வேயில் அத்தகு அந்நிய தாக்குதல் மற்றும் இயற்கை சீற்றங்களின் போது சிறப்பாக செயல்பட்டு, ரயில்வே ஊழியர்கள் மற்றும் சொத்துக்கள், பயணிகள் ஆகியோரை காப்பதற்கு ரயில்வேயின் பொதுமக்கள் பாதுகாப்புப் படை பணியாற்றி வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் இப்படையில் தெற்கு ரயில்வே பிரிவுக்கு துணைப் பொதுமேலாளர் தலைமை இயக்குநராக உள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும், ரயில்வே ஊழியர்களுக்கு பயிற்சி முகாமை வெவ்வேறு இடங்களில் இந்த அமைப்பு நடத்தி வருகிறது. இதன் 82-வது பயிற்சி முகாமை, உதகை கேத்தி ரயில் நிலையம் பின்புறம் உள்ள சாரணசாரணியர் கட்டிடத்தில் இன்று காலை சுமார் 10.30 மணி அளவில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா துவக்கி வைத்தார். தெற்கு ரயில்வே பொதுமக்கள் பாதுகாப்புப் படை முன்னாள் தலைமை இயக்குநர் பி.இளங்கோவன், தெற்கு ரயில்வே பொதுமக்கள் பாதுகாப்புப் படை துணை இயக்குநர் மற்றும் தெற்கு ரயில்வே முதுநிலை துணைப் பொதுமேலாளர் ஆர். முரளி மற்றும் தெற்கு ரயில்வேயின் இதர அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இப்பயிற்சி முகாமிற்கு பொதுமகக்கள் பாதுகாப்புப் படையின் முதுநிலை ஆய்வாளர் பி. ரகுநாதன் பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.

தெற்கு ரயில்வேயின் பல்வேறு கோட்டங்களில் இருந்து புதிதாக பணியில் சேர்ந்த சுமார் 130 ரயில்தடப்பராமரிப்புப் பணியாளர்கள் பங்கேற்று, முதலுதவி, தீயணைப்பு மற்றும் இதர மீட்பு நடவடிக்கைகளில் பயிற்சி பெற உள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...