நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு மாறாக கள்ளத்தனமாக மதுவை பதுக்கி விற்பனை செய்யும் சமூக விரோதிகளின் செயலை அம்பலப்படுத்திய வாலிபர் சங்கத்தினர் மீது பொய்வழக்கு போடும் காவல்துறையின் செயல்பாடு சமூக விரோதிகளுக்கு துணைபோவதாய் உள்ளது என வாலிபர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் இச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜே.ரவீந்தரன், செயலாளர் கே.எஸ்.கனகராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குபிறகு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் பள்ளி, பேருந்து நிலையம், குடியிருப்பு, மருத்துவமனைகள் போன்ற இடங்களில் மதுக்கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கோவையில் பல மதுக்கடைகள் மூடப்பட்டது. ஆனால் அகற்றப்பட்ட பல டாஸ்மாக் கடைக்களில் சட்ட விரோதமாக மதுவிற்பனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் வாலிபர் சங்கத்தினர் புகார் தெரிவித்து வந்தோம். ஆனால் இதற்கு எந்தவித நடவடிக்கையும் இல்லாத நிலையில் பொதுமக்கள் காவல்துறையினர் சட்டவிரோத மதுவிற்பனைக்கு துணைபோவதாக பகிங்கரமாக குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் கோவை சிங்காநல்லூர் பேருந்துநிலையம், கணபதி சங்கனூர் சாலையில் உள்ள மூடப்பட்ட மதுக்கடைகளில் பகிங்கரமாக மதுவிற்பனை செய்வதை கண்டித்து வாலிபர் சங்கத்தினர் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டோம். சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்பவர்களை கைது செய்யாத காவல்துறையினர் போராட்டம் நடத்திய எங்கள் அமைப்பினர் மீது பொய்வழக்கு போடுவதும், கைது செய்வதாக மிரட்டுவதும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிற நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை அமலாக்க சென்ற வாலிபர் சங்கத்தினரை சமூக விரோதிகள் போல சித்தரித்து பொய்வழக்கு போடுவதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது.
இதுபோன்ற நடவடிக்கை காவல்துறையினர் கைவிட்டு சட்டவிரோதமாக மதுவை பதுக்கிவைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்யும் சமூகவிரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.