கோவையில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த காரணத்தினாலும், கோவை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையும் தடுக்கும் வகையில் கோவை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் நடவடிக்கையாக டவுன்ஹால் பகுதியில் உள்ள கோவை மாநகராட்சி அலுவலகத்தின் வெளிப்புறத்தில் பேருந்து நிலையத்தின் அருகே மக்களுக்கு குடிநீர் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த குடிநீர் டேங்க் நடைபாதையின் வழியே உள்ளதால் பொதுமக்கள் பேருந்துகள் அதிகம் வந்து செல்லும் சாலைகளில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மாநகராட்சி நிர்வாகம் இந்த குடிநீர் டேங்கை மாநகராட்சி அலுவலகத்தின் உட்புறத்தில் வைத்து தருமாறு பொதுமக்கள் அறிவுறுத்தியுள்ளனர்.