மேட்டுப்பாளையதில் இருந்து உதகை செல்லும் சாலையில் இரண்டாவது ஊசிமுனை வளைவு அருகே உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு ஆண் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக மேட்டுப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இதன் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த நபருக்கு சுமார் 35 முதல் 40 வயது இருக்கும் எனவும், தலை மற்றும் கண்களின் அருகே காயம் ஏற்பட்டுள்ளதால் யாரேனும் அடித்து கொலை செய்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.