கோவை, சவுரிபாளையம் பகுதியில் கடந்த 20ம் தேதியன்று சதீஷ் குமார் என்பவரை சிலர் கொலை செய்து விட்டு தலைமறைவாகினர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், சதீஷ்குமாரை கொலை செய்த வழக்கு தொடர்பாக வரதராஜபுரத்தைச் சேர்ந்த முகமது முஸ்தபா, சதீஷ்குமார், சுமேஷ் ஆகிய மூன்று பேர் கோவை 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். முன் விரோதம் காரணமாக சதீஷ்குமாரை கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.